பாஜக-வின் ‘ஒரு நோட்டு; ஒரு ஓட்டு’- இளைஞர்களை குறிவைத்து நூதன பிரச்சாரம்

By மா.மணிகண்டன்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வின் பக்கம் இளைஞர்களை ஈர்க்க ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’நூதன பிரச் சாரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் துண்ட றிக்கை, சுவர் விளம்பரம், வீடு வீடாக சென்று வாக்களர்களை சந்திப்பது, இலவசங்களை கொடுப்பது இவைதான் வாக்கு களை ஈர்க்க அரசியல் கட்சிகள் வழக்கமாக பின்பற்றும் பாணி. ஆனால், இதிலிருந்து மாறுப்பட்டு வாக்காளர்களை கவர ‘மோடி ஃபார் பிஎம் ஃபண்ட்’ என்னும் நூதன பிரச்சார யுக்தியை கையாண்டு வருகிறது பாஜக.

இந்த பிரச்சார முறைப்படி பொதுமக்களிடம் பிரச்சாரக் குழுவி னர், பொதுமக்களிடம் ஏதாவது ரூபாய் நோட்டைக் கேட்டுப் பெற்று அதற்கு பதிலாக பாஜக-வின் தேர்தல் சின்னம் பொறிக்கப்பட்ட கூப்பனை கொடுக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு ‘ஒரு நோட்டு ஒரு ஓட்டு’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். அதன் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு தீவிர முயற்சிகளை தமிழக பாஜக மேற்கொண்டு வருகிறது.

இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறுகையில், “மற்ற மாநிலங்களில் ஜனவரியிலேயே இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. சென்னையில் கடந்த ஒரு வாரகாலமாக இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இளைஞர்களுக்கு மோடி மீது நல்லதொரு மரியாதை இருக்கிறது. அதனை வாக்காக மாற்றுவதற்கு, இந்த முறை கைகொடுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: இந்த திட்டத்தின் மூலம் எவ்வளவு ரூபாய் பெறுகிறோம் என்பதைவிட எத்தனை பேரை சந்திக்கிறோம் என்பது தான் முக்கியம். அனைத்து மாவட்டங்களிலும் தினமும் முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் பேரைச் சந்திக்கி றோம் என்றார்.

முதல் முறையாக வாக்களிக் கவுள்ள மயிலாப்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், “பத்து ரூபாய் கேட்டார்கள். கொடுத்தேன். அதன் பின் அவர் கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டுமென்று ஒரு கூப்பனை கொடுத்தார்கள். இந்த பிரச்சார உத்தி வித்தியாசமாதான் இருக்கு” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்