பெரம்பூரில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு: `தி இந்து செய்தி எதிரொலி

By செய்திப்பிரிவு

பெரம்பூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் குடம் நீர் ரூ.5-க்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பது பற்றி “தி இந்து” வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

செம்பியம் பகுதியில் உள்ள திருநாவுக்கரசு தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களில் சமீப காலமாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லாமல் இருப்பது பற்றியும், சில நேரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்தும் பொதுமக்கள் புகார் கூறியது பற்றி தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதனால் தனியார் லாரியில் வரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவது பற்றிய தகவலும் இடம்பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து வியாழக் கிழமை காலை, திருநாவுக்கரசு தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர் வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று நீரை விநியோ கிக்கும் குழாய்களில் கசிவு இருக்கிறதா என்று சோதனை செய்தனர். அங்கு ஏற்பட்டிருக் கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்