பரம்பிக்குளம், உடுமலைப்பேட்டை கால்வாய்களை திறக்க முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக 7-ஆம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்: திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக இடைவெளிவிட்டு பாசனத்திற்காக 7.1.2014 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்