ஆவடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு, மர்ம நபர்களால் காவலாளி கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சி.டி.எச்., சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக ஹரிஹரன் பணி புரிந்து வருகிறார். அத்துடன், மேலும் மூன்று பெண் ஊழியர் களும் உள்ளனர். இங்கு பொது மக்களிடமிருந்து நகைகளை அடமானமாகப் பெற்று கடன் வழங்கப்படுகிறது. அத்துடன், டெபாசிட்டும் பெறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் காவலாளியாக, அம்பத்தூர் பானு நகரைச் சேர்ந்த நடராஜன் (50) என்பவர் திங்கள்கிழமை இரவு பணியில் இருந்தார். செவ்வாய்க்கிழமை காலை7 மணிக்கு, திருவள்ளூரை சேர்ந்த ராமு என்ற காவலாளி பகல்நேர பணிக்காக சென்றார்.
அப்போது, நடராஜன் முகத்தில் துணி மூடிய நிலையில் சேரில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், பைனான்ஸ் நிறுவனத்தின் பிரதான கதவின் ஒரு பூட்டு உடைக் கப்பட்டிருப்பதையும் கண்டார். உடனே இதுகுறித்து மேலாளர் ஹரிஹரனுக்கு தகவல் அளித்தார்.
அவர் இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துணை ஆணையர் மயில்வாகனம், உதவி ஆணையர் கங்கைராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்த காவலாளி நடராஜனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. திங்கள் கிழமை நள்ளிரவு கொள்ளை யடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், பூட்டை உடைக்க முடியவில்லை. சத்தம் கேட்டு எழுந்த காவலாளி நடராஜ், கொள்ளையர்களை தடுக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நடராஜன் முகத்தை துணியால் அமுக்கி கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள் ளது. கொள்ளையர்களால் பூட்டை உடைக்க முடியாததால், பைனாஸ் நிறுவனத்தில் வைக்கப்பட்டி ருந்த ரூ.1.35 கோடி நகைகள் மற்றும் ரூ.4.50 லட்சம் ரொக்கம் ஆகியவை தப்பியது.
இதுகுறித்து, ஆவடி போலீ ஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago