இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 15 விசைப்படகுகள் விடுவிப்பு- 111 மீனவர்கள் ஓரிரு நாளில் திரும்புகின்றனர்

By செய்திப்பிரிவு

தமிழக அரசு புதன் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:

சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை மீனவர் கள் கூட்டம் தொடர்பாக தமிழக அரசின் மீன்வளத்துறை செயலாளர், மத்திய அரசில் உள்ள அதிகாரிகளுடன் 10.01.2014 அன்று விவாதி் தார். அப்போது இரு நாட்டு மீனவர்களின் கூட்டம் நடை பெறுவதற்கு முன்பு இலங்கைச் சிறைகளில் இருந்து மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் இலங் கைச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை 13.1.2014 முதல் விடுவிப்பதற்கான நடவடிக் கைகளை இலங்கை அரசு எடுக்கும் என தெரிவித்த மத்திய அரசு, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடு விக்க கேட்டுக் கொண்டது. அதன்படி நடவடிக்கையை துவக்க முதல்வர் ஜெயலலிதா 11.1.2014 அன்று உத்தரவிட்டார்.

முதல்வரின் தொடர் முயற்சி காரணமாக இதுவரை 211 தமிழக மீனவர்களும், காரைக்கால் பகுதி யைச் சேர்ந்த 22 மீனவர் களும் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று தமிழக சிறைகளில் இருந்த 130 இலங்கை மீனவர்கள் இதுவரை விடுவிக்கப் பட்டுள்ளனர்.

11.12.2013 அன்று இலங்கை கடற்படையினரால் நாகப் பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 111 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் 15 மீன்பிடி விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. திரிகோணமலை நீதிமன்றம் இந்த மீனவர்களை 17.1.2014 அன்று விடுவித்தது. ஆனால், அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி விசைப் படகுகள் திருப்பித் தரப்படவில்லை.

முதல்வரின் தொடர் நடவடிக்கை காரணமாக புதன்கிழமை பிற்பகல் 15 மீன்பிடி விசைப்படகுகளை திரிகோணமலை நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 111 மீனவர்களும் அவர்களின் விசைப்படகுகளுடன் ஓரிரு நாளில் தமிழகம் திரும்பு வார்கள். இதேபோன்று இலங்கை மீனவர்களின் 11 மீன் பிடி படகுகளை தமிழக அரசு புதன்கிழமை விடுவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்