தாம்பரத்தில் நடந்து வரும் 3-வது முனையம் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 8 நடைமேடைகள், 3 பணிமனை வசதியுடன் அமைக்கப் படுகிறது. இந்த ஆண்டு இறுதிக் குள் இந்த முனையம் பயன் பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
சென்னை போன்ற மாநகரில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போக்கு வரத்து தேவையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக் கிறது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களுக்கு அடுத்து மூன்றாவதாக ஒரு ரயில் முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான, போதிய இடவசதி இருந்ததால் தாம்பரம் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு தாம்பரத்தில் புதிய ரயில் முனை யம் அமைக்கும் பணிகள் தொடங் கப்பட்டு, தற்போது, 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் முழு பணிகளையும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இதுவரையில் எந்த ரயில் நிலையத்திலும் இல்லாத வகையில் பெரிய அளவில் நவீன உணவகம் அமைக்கப்படு கிறது. தாம்பரம் கிழக்கு பகுதி யில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5 விரைவு ரயில்கள் இங்கிருந்து இயக்கப் படுகின்றன. பிறகு, தேவையை கருத்தில் கொண்டு ரயில் களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, ‘‘தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் ரூ.33 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரம் செலவில் நடந்து வருகிறது. இந்த முனையத் தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 8 நடைமேடைகள் இடம் பெறுகின்றன. ரயில்களை தூய்மைப்படுத்தவும், பராமரிக் கவும் 3 பணிமனைகள் அமைக்கப் படவுள்ளன. இதில், தற்போது 2 பணிமனைக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தாம்பரம் ரயில் முனையம் திறக்கும்போது, பயணிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் சில ரயில்கள் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தாம்பரத்தில் இருந்தே பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க முடியும். இதனால், பயணிகள் கூடுதல் ரயில்சேவை பெறுவதுடன், வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago