சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வுடன் மக்கள் தேமுதிக இணைப்பு

By எஸ்.விஜயகுமார்

சேலத்தில் நேற்று இரவு நடை பெற்ற விழாவில், திமுக பொருளா ளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வுடன் மக்கள் தேமுதிக நேற்று இணைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, மக்கள்நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததற்கு அக்கட்சி எம்எல்ஏ-க்கள் சந்திர குமார், பார்த்திபன், சேகர் உள் ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் தேமுதிக-வில் இருந்து நீக்கப்பட்டனர்.

தேமுதிக-வில் இருந்து நீக்கப் பட்டவர்கள் ஒன்றுகூடி மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி, திமுக-வுடன் தேர்தல் கூட்டணி அமைத்தனர்.

தேர்தலுக்குப் பின்னர் மக்கள் தேமுதிக-வின் ஒருங்கிணைப் பாளர்களான சந்திரகுமார், பார்த் திபன், சேகர் உள்ளிட்டோர் திமுக வில் இணைந்தனர். மேலும், சேலத்தில் பிரம்மாண்டமான விழா எடுக்கப்பட்டு, மக்கள் தேமுதிக வை திமுக-வுடன் முறைப்படி இணைக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர். அதன்படி மக்கள் தேமுதிக, திமுக-வுடன் இணையும் விழா சேலம் கோட்டை மைதானத் தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, தலைமை வகித்தார். சேலம் மாநகர செயலாளர் ஜெயகுமார் வரவேற்றார். மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் உள் ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திமுக-வில் இணைந்தனர்.

பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:

மக்கள் தேமுதிகவினரிடம் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை எடுத்துச் சொல்லுங்கள், யாரை யும் விமர்சிக்க வேண்டாம் என்று கூறினேன். அவர்களும் அதனை உணர்ந்து, மக்கள் தேமுதிக எப்படி உருவானது என்று தெளிவாக எடுத்துரைத்தனர்.

திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் யார்? என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. அதற்கு விளக்கம் சொல்ல விரும்ப வில்லை. அதற்கு காரணமானவர் கள் பற்றி பேசி, அவர்களுக்கு விளம் பரம் தேடித் தரவும் விரும்பவில்லை.

திமுகவை அழிக்க முடியாது

திமுக-வை அழிக்க நினைத்த வர்கள் அழிந்து போயிருக்கிறார் கள். ஆனால், திமுக அழிந்தது கிடையாது. திமுக-வின் சேவை மக்களுக்கு தேவை. நூற்றாண்டு ஆட்சி கண்ட திமுக, இன்னொரு நூற்றாண்டு ஆட்சியை தமிழகத்தின் வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டும்.

வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக் கொள்வது திமுக மட்டுமே. ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் 20 ஆண்டு பின்னோக்கி சென்றுவிட்டதால், அதை மீட்க தமிழகத்தை முன்னுக்கு கொண்டு வரவே திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர் என்றார்.

கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற மதேமுதிகவினர்.

படங்கள்: எஸ். குரு பிரசாத்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்