மதுரை மாநகராட்சியில் பழைய மாநகராட்சி 72 வார்டுகளில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்றுவதற்கு தயார் செய்த ரூ.434 கோடி திட்டம் தாமதமாகிறது. அதனால், குடிநீர் குழாய்கள் துளை விழுந்து அதில் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் அபாயம் ஏற்படுகிறது.
மதுரை மாநகராட்சி பரப்ப ளவில் 51.82 சதுர கி.மீட்டரில் இருந்து 147.997 ச.கி.மீட்டராக தற்போது விரிவடைந்துள்ளது. மக்கள்தொகையில் 10.50 லட்சத்தில் இருந்து 14.50 லட்சமாக உயர்ந்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளுக்கு பழைய மற்றும் புதிய குடிநீர் திட்டங்கள் மூலம் 89.54 மில்லியன் கனஅடி குடிநீர் விநியோகிப்படுகிறது. பழைய மாநகராட்சி 72 வார்டுகளுக்கு வைகை குடிநீர் திட்டம்-1, 2 மற்றும் ஆழ்துளை கிணறு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் பெறப்படும் குடிநீர் பண்ணைப்பட்டியில் சுத்திகரித்து மதுரை மாநகர மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் 72 வார்டுகளிலும் வீடுகளுக்கான குடிநீர் விநியோக குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. அதனால், குழாய்கள் சேதமடைந்து அடிக்கடி குடிநீர் வீணாகிறது. குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து முதல் 100 வீடுகள் வரை குடிநீரில் குளோரின் அளவு 2 பிபிஎம் இருக்க வேண்டும். அடுத்தடுத்த வீடுகளுக்கு 0.2 பிபிஎம் முதல் 0.1 அளவாவது இருக்க வேண்டும். மழை காலங்களில் கலங்கலாக குடிநீர் வருவதால் குளோரின் அளவு 5 பிபிஎம் இருக்க வேண்டும். தற்போது சாக்கடை நீர் கலப்பதால் குளோரின் அளவு குறைந்த குடிநீரில் புழுக்கள் அதிகமாகி கடந்த 3 ஆண்டாகவே பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு மாநகராட்சி 130 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால், குடிநீர் குழாய் உடைந்து தற்போது குடிநீர் வீணாவதால் குடிநீர் பிரச்சினையும் சேர்ந்து ஏற்பட்டுள்ளது. அதனால், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.234 கோடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மாநராட்சியின் பழைய 72 வார்டுகளில் குடிநீர் குழாய்களை மாற்ற திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டம் தாமதமாவதால் குடிநீரில் கழிவுநீர் கலப்பு அதிகமாகி வருவதால் அதிகாரிகளுக்கு குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 1924-ம் ஆண்டில் இருந்தே மதுரை மாநகராட்சியில் குடிநீர் குழாய்கள் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு காலக்கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நகர் பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டபின் மாற்றப்படவில்லை. தற்போது மாநகர குடிநீர் குழாய்களையும், புறநகர் வார்டு குடிநீர் விநியோக குழாய்களையும் மாற்ற புதிதாக ரூ.434 கோடியில் புதிய திட்டம் தயார் செய்துள்ளோம். விரைவில் இந்த திட்டம் மத்திய, மாநில அரசு ஒப்புதலுக்கு அனுப்பி, அடுத்த நிதியாண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago