ஏற்காடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்குகிறது. மொத்தம் 14 டேபிள்கள் போடப்பட்டு, 20 ரவுண்டுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 4-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. சார்பில் சரோஜா, தி.மு.க. சார்பில் மாறன் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர். ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2,40,290 வாக்காளர்கள். இந்த தேர்தலில் ஆண்கள் 1,05,620 பேரும்; பெண்கள் 1,08,820 பேரும், திருநங்கை நான்கு பேர் என மொத்தம் 2,14,444 பேர் வாக்களித்துள்ளனர். ஏற்காடு இடைத்தேர்தலில் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆயுதம் ஏந்திய காவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கையில் 52 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படு கின்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் அறையை மாவட்டக் கல்வி அலுவலர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago