ஏற்காடு தேர்தலில் பிரசாரம் செய்ய கருணாநிதி திட்டம்
ஏற்காடு தொகுதியில் வரும் 4ம் தேதி, இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் வெ.மாறன், அதிமுக சார்பில் சரோஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆளுங்கட்சியின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்க, திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாதக் கடைசியில் அவர் ஏற்காடு தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தேர்தல் பிரசாரம் செய்ய திமுக எம்.பி. கனிமொழிக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாம். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.
இந்த தேர்தலில் திமுக பெறும் ஓட்டுகளை வைத்தே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகளை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதால், இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு இல்லாவிட்டாலும், அதிக ஓட்டுகளைப் பெற திமுக திட்டமிட்டுள்ளது.