அஞ்சல் நிலையங்கள் மூலம் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க தமிழ்நாடு அஞ்சல் வட்டாரம் முடிவு செய்துள்ளது. இச்சேவையை டிசம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்குவதற்கான ஆலோசனை யில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறை தற்போது ஏராளமான புதிய சேவைகளை அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டாரம், பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதமாக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் வட்டார மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அஞ்சல் வட்டாரம் கடந்த காலங்களில் பல முன்னோடி திட்டங்களை அறிவித்தது. அஞ்சல கங்களில் கடித போக்குவரத்து மட்டுமன்றி, அஞ்சலக சேமிப்பு, இ-போஸ்ட், மீடியா போஸ்ட் என நிறைய சேவை
கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாட்டு பண பரிவர்த் தனை, பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளும் அஞ்சல் நிலையத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு உதவும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில அஞ்சல் நிலையங்கள் மூலம் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை நெடுஞ் சாலைக்கு அருகே உள்ள அஞ்சல் நிலையங்களில் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் படி சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையங்களில் தனியார் நிறுவனம், தன்னார்வ அமைப்புகள், அரசு சார்ந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தேவைப் படும் நபர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலக்சாண்டர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: அஞ்சல் துறை, காலத்துக்கு ஏற்ப பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப் படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மையங்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங் களில் வரும். டிசம்பரில் இந்த சேவை தொடங்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago