விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யம் பகுதியில், தற்போது 268 அரிய வகை பறவையினங்கள் பல்வேறு இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது ராஜபாளையம். இந்த பருவகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல அரிய வகை நீர்ப் பறவைகள் மற்றும் காட்டுப் பறவைகள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் தஞ்சம் அடைவது வழக்கம். அதிக உயிர் பல்வகைத் தன்மை கொண்ட (தாவ ரம், விலங்குகள்) பகுதி ராஜபாளையம்.
காமன்டீல் பறவை
உணவுச் சங்கிலியில் பறவைகள் முக்கியப் பங்கு வகித்து வருகின் றன. மேலும், மனித வாழ்க்கை சுழற்சியில் பறவைகளின் பங்கு மிக இன்றியமையாதது. ராஜபாளை யம் பகுதியில் 268 வகையான பறவையினங்கள் இருப்பது கணக் கிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட் டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் சரண், விஷ்ணுசங்கர் மற்றும் வன உயிரின பாதுகாப்புச் சங்க உறுப் பினர்கள் கொண்ட குழுவினர், ராஜபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி, கடந்த வாரம் வரை ராஜபாளையம் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்த பறவைகள் குறித்து ஆய்வு நடத் தினர். அப்போது, இந்த பருவ காலத்தில் வழக்கமாக வரும் பறவையினங்களைவிட பல்வேறு அரிய வகை பறவையினங்கள் வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பறவைகள் ஆர்வ லர் சரண் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் செஸ்ட்நெட் டெயில்டு ஸ்டார் லிங்க்ஸ், நாபுபைல்டு டக் இவை இரண்டும் 5 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மீண்டும் ராஜபாளையம் வந்துள்ளன. இதையடுத்து, ஐரோப் பிய நாடுகளில் உள்ள பறவை யினங்களான யுராசியன் பிஜியன், காமன்டீல், லெசர் ஒயிட் துரோட் போன்ற பறவையினங்களும், நாதன் சோவ்லர்ஸ், நாதன் பின்டைல்ஸ், கார்கனேஸ், ஸ்பாட் பைல்டுடக்ஸ் போன்ற பறவையினங்களும் ராஜபாளையம் வந்துள்ளன.
லெசர் ஒயிட் துரோட் பறவை
ரிவர்டேர்ன்ஸ் வகை பறவை யும், பல மாதங்களுக்குப் பிறகு ராஜபாளையம் வந்துள்ளது. மேலும், இனப்பெருக்கத்துக்காக ரோஸ்பிஞ்ச் பறவை வந்துள்ளது. இதில், பெண் பறவை மட்டுமே ராஜபாளையம் பகுதியில் உள்ளது. ஆண் பறவை வந்ததாகக் கண்ட றியப்படவில்லை. குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து வரும் ரோசி ஸ்டார்லிங்க்ஸ் வகை பறவைகள், நூற்றுக்கணக்கில் ராஜபாளையம் வந்துள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இப்பறவைகள் அதிக மாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் உள்ள நாகாலாந்து மாநிலத்துக்கு வரும் ஆமர்பால்கன் பறவைகளும், கிரே ஹெட்லேப் விங் என்ற பறவை வடகிழக்கு சீனாவில் இனப்பெருக் கம் செய்து, தற்போது ராஜபாளை யம் நோக்கி வந்துள்ளதும் குறிப் பிடத்தக்கது.
இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக ஆறு, ஏரிகளில் தண்ணீர் இல்லாதபோதும், அரிய வகை பறவைகள் ராஜபாளையம் வந்துள்ளதால் பறவைகள் ஆர் வலர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago