கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்காக 14 ஆண்டுகளாக காத்திருக்கும் காவலர்களின் வாரிசுகள்

By இ.மணிகண்டன்

தமிழக காவல்துறையில் பணி யின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகள் சுமார் 2,500 பேர் கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்து கடந்த 14 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.

சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்களைத் தடுப்பது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வது ஆகிய செயல்களில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் முழு வதும் 1 லட்சத்துக்கும் அதி கமான காவலர்கள் பணிபுரிகின் றனர்.

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் அதிகாரிகள் வரை பணியின் போது இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணிகளில் வேலை வழங்குவது நடைமுறை யில் உள்ளது.

ஆனால், கடந்த 2002-க்குப் பிறகு இறந்த காவலர்களின் வாரிசுகளுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளனர்.

மேலும், காவல்துறையில் பணியாற்றி இறந்தவர்களின் வாரிசுகள் சுமார் 2,500 பேர் கருணை அடிப்படையில் வேலை கோரி விண்ணப்பித்து காத்திருக் கின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.முத்து கூறியதாவது:

பணியில் இருக்கும்போது காவலர்கள் பலர் இறந்துள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு அரசு வழங்கும் நிவாரண நிதி தற்காலிகத் தீர்வு ஆகும். வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

ஆனால், கருணை அடிப்படை யில் பணி நியமனம் என்பது எட்டாக்கனி என்ற நிலையே காவல்துறையில் நீடிக்கிறது. பணியில் இருக்கும்போது இறக் கும் காவலர்களின் குடும்பத்தினர் பலர் நிர்க்கதியாக வாழ்நாளை நகர்த்தி வருகின்றனர்.

கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பின்னர் கருணை அடிப்படை யில் பணி நியமனம் செய்யப் படவில்லை. இதனால் கருணை அடிப்படையில் பணி வேண்டி காத்திருப்போர் எண்ணிக்கை 2,500-க்கு மேல் உள்ளது.

ஒரு சிலருக்கே கருணை அடிப் படையில் பணி வழங்கப்பட்டது. அதுவும் இளநிலை உதவியாளர் பணி அல்லாமல், ரூ.2,500 தொகுப்பு ஊதியத்தில் கணினி விவரப் பதிவாளர் பணியே வழங்கப்பட்டது.

காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி பல ஆண்டு களாகக் காத்திருக்கும் நிலை தொடர்பாக காவல் துறை இயக்குநர், அரசு உள்துறைச் செயலருக்கு மனு அளிக்கப் பட்டுள்ளது.

அதில், காவல்துறை அமைச்சுப் பணியில் காலியாக இருக்கும் 175 இளநிலை உதவி யாளர் பணியிடங்களை நிரப்பக் கோரியும், காவல் ஆணையக் குழுவின் பரிந்துரைப்படி கூடுதல் அமைச்சுப் பணியாளர் கோரியும் குறிப்பிட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்