பிரச்சாரத்தில் முதல்வருக்கு சலுகையா?- பிரவீன்குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டரும் சோதனை செய் யப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் களை பொருத்தவரை, வர்த்தக ரீதியான தளங்களில் இருந்து புறப்பட்டால், அதில் மத்திய படையினர் சோதனையிடுவர்.

வர்த்தக ரீதியல்லாத தளங்களில் தரையிறங்கினால், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வர். தரையிறங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். முதல்வரின் ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி செய்யா விட்டால் அது தவறாகும்.

கன்னியாகுமரி சம்பவம்

கன்னியாகுமரியில் தேர்தல் ஊழியர் மீது பொய்யாக எப்.ஐ.ஆர். போடப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தங்களை அரசியல் கட்சியினர் மிரட்டுவதாக எங்களிடம் அதிகாரிகள் கூறினர். இதுபற்றி டிஜிபி-யிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி தகவல் அனுப்பியுள்ளார்.

ராமநாதபுரத்தில் அதிமுகவினர் பணம் கொடுத்ததாக திமுகவினர் கொடுத்த புகார் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து வழக்குப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசுவது பற்றியும் புகார் வந்துள்ளது. அவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்