தமிழகத்தில் புதிய விளையாட் டரங்குகள் அமைக்கவும், விளை யாட்டு வீரர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், ரூ.35.77 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளி யிட்ட செய்தியில் உள்ளதாவது:-
உணவுத்தொகை உயர்வு
விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தினமும் சத்தான சமச்சீர் உணவு வகைகளை வழங்க தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 75 ரூபாயை 250 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக ரூ.10.12 கோடி நிதி ஒதுக்கப்படும்.
முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியருக்கு ஒரு நாள் உணவுக்காக நபர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.150 ரூ.250 ஆக உயர்த்தப்படும்.இதற்காக ரூ.2.55 லட்சம் கூடுதலாக ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விளையாட்டு வளாகங்களை புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
புதிய விளையாட்டரங்கம்
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சிறுவர்களுக்காகவும், சிறுமியர் களுக்காகவும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்கள் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்ற மையங்கள் ஸ்ரீரங்கம், திருநெல்வேலி மற்றும் ஈரோட்டில் துவக்கப்படும்.இதற்காக 1.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரு உள்விளையாட்டரங்கம் அருகில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து திடல் வசதிகள் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.அதே போல ஸ்குவாஷ் அரங்கம், இறகு பந்து உள்ளரங்கம்,கையுந்து பந்து, கூடை பந்து ஆடுகளங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக நீர் சிகிச்சை, நீச்சல் குளம் ஆகியவை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஒரு விளையாட்டு வளாகமும் ரூ.12 கோடியில் அமைக்கப்படும்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வசதியாக தங்குவதற்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் நவீன தங்குமிடம் மற்றும் உணவுக்கூட வசதிகள் ஏற்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago