தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட சூழலில் 3 இலங்கை தமிழ் மீனவர்களையும் விடுதலை செய்ய அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 30 அன்று போதைப் பொருள் கடத்தியதாக தமிழக மீனவர்கள் 5 பேர் உள்பட , யாழ்ப்பாணம் மீனவர்கள் ஞானப்பிரகாசம் கமல் கிறிஸ்டி, துஷாந்தன், கிறிஸ்துராஜா, ஞானப்பிரகாசம் 3பேர் உள்பட 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்வர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியதை தொடர்ந்து வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் அவர்களுடன் கைது செய்யப்பட்ட யாழ்பாணத்தை சார்ந்த மூன்று மீனவர்களின் நிலைகுறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட வில்லை.
இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்பட்டது போல யாழ்ப்பாணத்தை சார்ந்த மூன்று மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து யாழ்ப்பாணம் மண்டைத் தீவை சார்ந்த மீனவர் கிறிஸ்துராஜாவின் மனைவி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்திய மீனவர்கள் 5பேரை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்துள்ளார். ஆனால் அவர்களுடன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள என் கணவர் கிறிஸ்துராஜா உள்ளிட்ட மூன்று மீனவர்கள் பற்றி தகவல் எதனையும் அரசு தெரிவிக்கவில்லை.
இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும்போது எங்கள் கணவர் உள்ளிட்ட 3 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துவதை தவிர வேறு வழியில்லை, என கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago