கபாலிக்கு கூடுதல் கட்டண வசூலை தடுக்கக் கோரிய மனுக்கள் ஒத்திவைப்பு

By கி.மகாராஜன்

கபாலி திரைப்படத்துக்கு தியேட்டர்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை தடுக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணையை 2 வாரத்துக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பி.கார்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தியேட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு 20.5.2009-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணைப்படி மாநகராட்சி பகுதிகளில் ஏசி தியேட்டர்களில் ரூ.10 முதல் ரூ.50 வரையும், ஏசி அல்லாத தியேட்டர்களில் ரூ.7 முதல் ரூ.30 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். நகராட்சி பகுதிகளில் ஏசி தியேட்டர்களில் ரூ. 5 முதல் ரூ.40, ஏசி அல்லாத தியேட்டர்களில் ரூ.4 முதல் ரூ.30, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஏசி தியேட்டர்களில் ரூ.5 முதல் ரூ.25, ஏசி அல்லாத தியேட்டர்களில் ரூ.4 முதல் ரூ.20 வரையும், ஊராட்சி பகுதிகளில் ஏசி தியேட்டர்களில் ரூ.5 முதல் ரூ.15 வரையும், ஏசி அல்லாத தியேட்டர்களில் ரூ.4 முதல் ரூ.10 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் தமிழக தியேட்டர்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையிடப்படுகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு 18.7.2016-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இணையதளத்தில் ஒரு டிக்கெட் ரூ.300க்கு விற்கின்றனர். அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவை தியேட்டர் உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை.

கபாலி படத்துக்கு மட்டுமின்றி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் நடித்த படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரஜினிகாந்த் ரசிகர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்கள். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் கபாலி படம் பார்க்க ஒரு வார சம்பளத்தை செலவிட வேண்டும். இந்த பாதிப்பை தடுக்க அரசாணைப்படி கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை.

எனவே கபாலி படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அரசாணைப்படி கட்டணம் வசூல் செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் கபாலி திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்கக்கோரி காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் விவகாரத்தை தமிழக அரசு கவனித்துக்கொள்ளும் என்ற நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

வழக்கு பதியக் கோரிய மனு மாற்றம்

மதுரை திருநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.மகாராஜன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கபாலி படத்தில் இடம் பெற்றுள்ள ‘உலகம் ஒருவனுக்கா’ என்ற பாடலில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவமானப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வரிகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பி பிற ஜாதியினரை கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்காக கபாலி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்