காவிரியில் புதிய அணைகள்: நவம்பர் 29-ல் டெல்டாவில் 500 இடங்களில் சாலை, ரயில் மறியல்; விவசாய சங்கங்கள் முடிவு

By செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு இரு அணைகள் கட்ட முடிவு செய்துள்ளதைக் கண்டித்து வரும் 29-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் 500 இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்த அனைத்து விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே இரு அணைகள் கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணை கள் கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடு மையாகப் பாதிக்கப்படுவதோடு, தமிழகத்தில் 15 மாவட்ட மக்களுக் கான குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும். எனவே, கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்துப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் பங் கேற்ற ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூ.) மாநிலப் பொதுச்செயலர் வே.துரை மாணிக்கம் தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பி.சண்முகம், காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலர் நெடுவை ராஜதுரை, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர்கள் சாமி.நடராஜன், ஏ.பன்னீர்செல்வம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கக்கரை சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டி னால் தமிழகம் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு களையும் கர்நாடக அரசு மதிப்ப தில்லை.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய மத்திய அரசு அலட்சியமாக உள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே, கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தின் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்திக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் 500 இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும்.” என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE