மீனவர் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாடு மீனவர் பிரச்சினையில் தலையிடுமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ளதாவது:

நான் உங்களுக்கு மார்ச் 4ந்தேதி கடிதம் எழுதியபிறகு 5ந்தேதியும் இரண்டு சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர் களை கைது செய்துள்ளனர். 3 நாட்டுப்படகுகளையும் இரண்டு விசைப் படகுகளையும் கைப்பற்றி உள்ளனர். மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து நமது மீனவர்களை கொடுமைப்படுத்தி வருகிறது. மீன்பிடி கருவிகளை பறித்து வாழ்வாதாரத்தை அழிக்கிறது.

இருநாட்டு மீனவர் தரப் பிலும் பேசி அன்றாட மீன் பிடிப்பு சம்மந்தமாக ஒரு நடைமுறை ரீதியான தீர்வை இலங்கையில் மார்ச் 13 அன்று நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் உருவாக்கும் முயற்சியை திட்டமிட்டு கெடுக் கின்றதோ எனும் வகையில் இலங்கை கடற்படையின் செயல் பாடுகள் உள்ளன. இந்திய அரசின் பலவீனமான போக்கு அவர்களை மேலும் தைரிய மூட்டக்கூடியதாகவே அமையும்.

முன்னதாக இலங்கைச் சிறையில் இருப்போரையும் இப்போது பிடிபட்டோரையும் சேர்த்து 177 மீனவர்களும் 44 படகுகளும் வரும் 13ந்தேதி பேச்சு வார்த்தைக்கு முன்பாக கட்டாயம் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கு உடனடியாக பதிலளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். என்று அவர் எழுதி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE