வீரப்பனின் கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்ட வனப்பகுதி இருந்த காலம் அது. அந்தியூர் புதுக்காட்டைச் சேர்ந்த அன்புராஜ், வனப்பகுதியில் தனது உறவினர்களான அப்பர் சாமி, தங்கராஜோடு மாடு மேய்த் துக்கொண்டு இருந்தார்.
மளிகைப்பொருட்களை வாங்க வசதியாக இருக்கும் என நினைத்த வீரப்பன், மூவரையும் மிரட்டி உடன் அழைத்துச் சென்றுவிட்டார். அவர் கள் வீரப்பனின் கூட்டாளியாகவே அதிரடிப்படையால் கருதப்பட்டனர்.
கடந்த 1995-ல் அந்தியூரில் 3 வனத்துறை அலுவலர்கள் வீரப்ப னால் கடத்தப்பட்ட வழக்கில் இவர்கள் 3 பேரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். அதே போல் 1997-ல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 9 வனத்துறை அலுவலர்கள் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக் கில் அன்புராஜ், அப்பர்சாமி, தங்கராஜ் ஆகியோருடன் சித்தன் என்பவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்.
பின்னர், வீரப்பனிடம் கதறி விடுதலை பெற்ற மூவரும், அதிரடிப்படை தலைவராக இருந்த டிஜிபி காளிமுத்து முன்பாக 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து சித்தனும் சரணடைந்தார்.
இந்த 4 பேர் மீதும் வீரப்ப னுக்கு உதவியதாக பர்கூர் காவல் நிலையத்தில் உள்ள வழக்கின் அடிப்படையில் நடந்த விசாரணை யில் 2004-ம் ஆண்டு அன்புராஜ் உள்ளிட்ட நால்வரும் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதற்கிடையே கர்நாடக வனத் துறை ஊழியர்கள் கடத்தல் தொடர்பான வழக்கில் 2001-ம் ஆண்டு சாம்ராஜ் நகர் விரைவு நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. தமிழக சிறைவாசம் முடிந்த பின், இவர்கள் நால்வரையும் கைது செய்த கர்நாடக போலீஸார், மைசூரு சிறையில் அடைத்தனர். மைசூரு சிறையில் 16 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்பு நன்னடத்தை அடிப்படையில் அன்புராஜ் உள்ளிட்ட நால்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று விடு விக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், நன்னடத்தை அடிப் படையில் விடுதலையாகும் வழக்க மான கைதிகளைப் போல் கர்நாடக அரசால் கருதப்படவில்லை. அன்பு ராஜ் மற்றும் இதர 3 பேரும் வழக்கு மற்றும் விடுதலை தொடர் பாக ஊடகங்களிடம் பேசக்கூடாது; சிறையில் இருந்த தற்கு இழப்பீடு கோரக்கூடாது என்பதுதான் அந்த நிபந் தனைகள். இதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பின்பே, இவர் களின் விடுதலைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. 19 ஆண்டு சிறைவாசத்துக்கு பின்பு வீரப்பன் கூட்டாளிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது; சுதந்திரம் இன் னும் கிடைக்கவில்லை.
சிறையில் காதல்
மைசூரு சிறையில் இருந்தபோது அன்புராஜ் கலைக்குழு நடத்தினார். 6-ம் வகுப்போடு நின்ற தனது கல்வியை தொடர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். தொழிற்கல்வியும் பயின்றார். கலைக்குழுவின் நிகழ்வுகளின்போது அதே சிறையில் இருந்த ரேவதியின் அறிமுகம் கிடைத்தது. காதல் மலர்ந்தது. 2011-ல் பரோலில் வந்த அன்புராஜ், ரேவதியை மணம் புரிந்தார். இவர்களுக்கு முக்தா எனும் பெண் குழந்தை உள்ளது.
நன்னடத்தை அடிப்படை யில் குடியரசு தினத்தன்று ரேவதி விடுதலையானார். தற்போது சுதந்திர தினத்தில் அன்புராஜ் விடுதலையானார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago