குழந்தைகள் தொடர் இறப்பு எதிரொலி: தருமபுரி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரி ஆய்வு

By செய்திப்பிரிவு

தருமபுரியில் கடந்த 14-ம் தேதி மாலை முதல் இரவு வரை அடுத் தடுத்து 5 குழந்தைகள் இறந்தன. இதில் 3 குழந்தைகள் குறைந்த எடை காரணமாகவும், 2 குழந்தைகள் நுரையீரல் பாதிப்பு மற்றும் குறைந்த எடை காரணமாகவும் இறந்ததாக மருத்தொடங் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்தது.

இதற்கிடையில் ஈச்சம்பாடியைச் சேர்ந்த சத்யா-வெங்கடேசன் தம்பதிக்கு நவம்பர் 11-ம் தேதி பிறந்த பெண் குழந்தை மறுநாள் தருமபுரி அரசு மருத்தொடங் கல்லூரி பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 1.75 கிலோ எடை மற்றும் நுரையீரல் பாதிப்புடன் இருந்த அந்த குழந்தை நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு இறந்துள்ளது. தொடர்ந்து குழந்தைகள் இறந்த சம்பவம் அரசு மருத்துவமனையை நாடும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான உண்மை நிலையறிய தமிழக அரசின் சுகா தாரத் துறை மூலம் நேற்று தருமபுரி அரசு மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் பிரிவு மற்றும் மகப் பேறு பிரிவு ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் உத்தர வுப்படி ஐஎம்சிஎன்ஐ பிரிவின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் சீனிவாசன் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு கருத்து தெரிவித்த அவர், ‘பச்சிளங் குழந்தை கள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு ஆகியவை முறையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகின் றன’ என்றார். அவர், தனது ஆய்வு குறித்த அறிக்கையை சுகாதாரத் துறை தலைமையிடம் சமர்ப்பிப்பார் என தெரிகிறது.

5 பெண் குழந்தைகள்

இறந்த 6 குழந்தைகளில் 5 பெண் குழந்தைகள் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த 6 சிசுக்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப் படாமலேயே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. “இறந்த குழந்தைகளின் குடும்பப் பின்னணியை விசாரித்து, தேவையெனில் பிரேத ஆய்வு செய்திருக்கலாம். அதன்மூலம் பெற்றோர் தரப்பில் ஏதேனும் தவறு இருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்” என பெண்ணுரிமையாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE