தூத்துக்குடி தெர்மலில் டிசம்பர் முதல் மின் உற்பத்தி

தூத்துக்குடியில் தமிழக அரசு மின் பகிர்மானக் கழகத்துடன் இணைந்து என்எல்சி அமைத்துள்ள 1000 மெகாவாட் திறன்கொண்ட புதிய அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவில் டிசம்பர் முதல் மின் உற்பத்தி துவங்கும் என புதன்கிழமை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மின்னுற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்துடன் இணைந்து என்எல்சி நிறுவனம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட அனல்மின் நிலையத்தை அமைத்துள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்து தற்போது மின் உற்பத்தி சோதனை நடைபெறுகிறது.

இந்த அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக 93 புதிய குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. இதை பி.சுரேந்திர மோகன் புதன்கிழமை திறந்து வைத்தார். இம்மின் நிலையத்தின் முதல் பிரிவில் இவ்வாண்டு டிசம்பர் மாதத்திலும், 2-வது பிரிவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலும் மின்னுற்பத்தி துவங்கும் என சுரேந்திரமோகன் அப்போது தெரிவித்தார்.

இவ்விழாவில் மின்துறை இயக்குநர் எஸ்.ராஜகோபால், அதிகாரிகள் என்.முத்து, கே.சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE