மதுரையில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் மதுரை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதன் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அண்மையில் கோவை வந்தார். அப்போது நடிகர் விஜய் அவரை சந்தித்துப் பேசினார். இதனால் விஜய் ரசிகர்களின் ஓட்டுகள் பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என பரவலாகப் பேச்சு இருந்தது.

இந்நிலையில் மதுரை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜ், செயலர் செந்தில், பொருளாளர் செல்வா உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் கூறினர்.

அப்போது மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இது பாஜக மற்றும் விஜய் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்