கேட்பாரற்று கிடக்கும் சுதந்திர போராட்ட வீரர் சிலைகள்

By ச.கார்த்திகேயன்

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவச் சிலைகள் கேட்பாரற்று கிடப்பது பொதுமக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்கள், சமூக மேம்பாட்டுக்காக பாடுபட்ட தலை வர்கள் என 20-க்கும் மேற்பட்ட சிலைகள் சென்னையில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, சென்னை துறைமுகம், அரசு அலு வலக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

இந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளின்போது மட்டும், சிலை இருக்குமிடம் அழகுபடுத்தப்பட்டு, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்து வது வழக்கம். மற்ற நாட்களில் அந்த சிலைகள் கண்டு கொள்ளப் படுவதில்லை. சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய முக்கிய தினங்களில் இந்த சிலைகளுக்கு மரியாதை செய்யப் படுவதில்லை. அவை கேட்பாரற்று கிடக்கின்றன.

வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது கூட, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அலுவலகத்துக்கு எதிரே உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலை கவனிப்பாரின்றி கிடந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, வ.உ.சி சிலைக்கு அவர் மீது அன்புகொண்ட துறைமுகத் தொழி லாளி, தனது செலவில் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். அப்போது அவர் கூறும் போது, “எதற்கெல்லாமோ பணத்தை செலவிடும் அரசு, இதுபோன்ற சுதந்திரப் போராட்ட தலைவர்களின் சிலைகளை அலங் கரிப்பதில்லை. எனக்கு மனம் கேட்காமல் மாலை அணிவித்தேன். ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் இந்த சிலை கவனிப்பாரின்றி இருக்கிறது. இது பொது மக்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. இச் செயலால், சுதந்திர போராட்ட வீரர்களை, அடுத்து வரும் தலைமுறையினர் மறக்க நேரிடும் அபாயம் உள்ளது” என்றார்.

இது தொடர்பாக அரசு செய் தித்துறையில் கேட்டபோது, “இது போன்ற முக்கிய விழாக்களின் போது நிச்சயம் சுந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக பரிசீலித்து, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் குறித்து கணக்கெடுத்து, அவற்றை சுதந் திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்படும். அதற்குரிய அரசாணையும் விரைவாக பிறப்பிக்கப்படும் என்றனர்.

தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளின்போது மட்டும், சிலை இருக்குமிடம் அழகுபடுத்தப்பட்டு, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்துவது வழக்கம். மற்ற நாட்களில் அந்த சிலைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்