தேனி அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து இறப்பு: உரிய சிகிச்சை இல்லையென பெற்றோர் புகார்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள கானா விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தம்பிநாயக் கன்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சுகன்யா என்பவர் பிரச வத்துக்காக, கடந்த 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மறுநாள் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், சில மணி நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த வாரம் கோம்பை பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து - முத்துமணி தம்பதியின் குழந்தை மற்றும் போடி அருகே கரட்டுபட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் - பெத்தம்மாள் தம்பதியின் குழந்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் உரிய சிசிச்சை அளிக் காததால், அடுத்தடுத்த நாட்களில் அக்குழந்தைகள் இறந்துவிட்டதாக பெற்றோர் மத்தியில் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜமுத்தையா கூறியதாவது: ‘ராமமூர்த்தி - சுகன்யா தம்பதியின் குழந்தை கர்ப்பப்பையில் இருக்கும்போது நஞ்சுக்கொடி பிரிந்துவிட்டது. இதனால் குழந்தை இறந்தே பிறந்தது. மற்ற இருவரின் குழந்தை கள் எடைக் குறைவு, நஞ்சுக் கொடி சுற்றி மூச்சுத் திணறல் ஏற்படுதல், பிறவிக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இறந்திருக்கலாம். தருமபுரி சம்ப வத்தினைத் தொடர்ந்து பெற்றோர் அச்சமடைந்துள்ளதாகத் தெரி கிறது. இங்கு திறமை வாய்ந்த மருத்துவர்கள், பணியாளர்களைக் கொண்டு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. யாரும் அச்சப்பட வேண்டாம். குறிப்பாக வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE