விவசாயிகள், ஏழைகளின் சக்தியை மோடி அரசுக்கு விரைவில் புரியவைப்போம் என்றார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று திருச்சியில் விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நாடு முழுவதும் சென்று விவசாயிகளைச் சந்தித்து வருகிறீர்கள். இதனால் ஏற்பட்ட பயன் என்ன?
பதில்: பாஜக அரசு நாட்டிலுள்ள விவசாயிகளின் நிலங்களைப் பறித்து தனியார் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. எங்களின் முயற்சியால் ஏழை விவசாயிகளின் நிலங்கள் பறிபோவது தடுக்கப் பட்டு வருகிறது. நாட்டில் தொழில் துறைக்கென நிலம் கையகப்படுத்துவதில் 8 சத வீதம் மட்டுமே பின்னடைவு ஏற்பட்டுள்ளதென நிதித் துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால், அப்படியில்லை. முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்தியா ஒன்றிரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது அல்ல. ஏழைகளுக்கான நாடு. விவசாயிகளுக்கான நாடு. ஆனால், ஏழைகள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களின் சக்தியை மோடி அரசு இன்னும் முழுமையாக உணரவில்லை. இவர்களின் உண்மையான சக்தி என்ன என்பதை மோடி அரசுக்கு விரைவில் புரிய வைப்போம்.
கேள்வி: காவிரி, முல்லை பெரியாறு நதிநீர் பிரச்சினைகள் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதில் தொடர்புடைய இரு அண்டை மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த அரசுகளுடன் பேசி, இப்பிரச்சி னைக்கு தீர்வு ஏற்படுத்த முன்வருவீர்களா?
பதில்: கலந்துரையாடலில் பங்கேற்ற விவசாயிகளும் இந்த பிரச்சினைகள் குறித்து என்னிடம் தெரிவித்தனர். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ் வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
பேட்டியின்போது காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் இளங்கோ வன், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago