2 ஆண்டுகளுக்கும் மேல் வியாசர் பாடி எரிவாயு தகனமேடை இயங்காமல் இருப்பதால், சடலத்தை எரியூட்ட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படு கின்றனர்.
3 லட்சம் பேர்
வியாசர்பாடி, ஏபிசி கல்யாணபுரம், மெகசின்புரம், மல்லிகைப்பூ காலனி, கென்னடி நகர், நேரு நகர், சாமந்திப்பூ காலனி, சத்தியமூர்த்தி நகர், உதய சூரியன் நகர், ஜெகஜீவன்ராம் நகர், தேபர் நகர், தாமோதரன் நகர், எம்.ஜி.ஆர். நகர், மகாகவி பாரதி நகர், சர்மா நகர், சிவகாமி அம்மாள் காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், ராஜரத்தினம் நகர், எழில்நகர், பள்ளத்தெரு, சாமியார் தோட்டம், ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இயங்காத தகனமேடை
இப்பகுதிகளில் இறப்பவர்களை எரியூட்டுவதற்காக வியாசர்பாடி முல்லைநகர் அருகில் சுடுகாடு உள்ளது. இங்கு சராசரியாக தினமும் 2 சடலங்கள் வருகின்றன. இங்குள்ள எரிவாயு தகனமேடையை ஜூவாலா என்ற தனியார் நிறுவனம் இயக்கி வந்தது. தகனமேடையில் பழுது ஏற்பட்டதால், அதன் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அத னால், சடலத்தை எரியூட்ட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 37-வது வட்ட கிளைச் செயலாளர் வேதாச்சலம் கூறியதாவது:-
நடவடிக்கை இல்லை
வியாசர்பாடி சுடுகாட்டில் உள்ள எரிவாயு தகனமேடை 2 ஆண்டுகளுக் கும் மேலாக இயங்காமல் உள்ளது. அதில் ஏற்பட்ட பழுதினை நீக்க வேண்டும் என்று பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. சவுந்தரராசன் மூலம் மாநகராட்சி கமிஷனரிடம் 3 தடவை புகார் கொடுத்தோம். எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து, ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
அவதிப்படும் கிறிஸ்தவர்கள்
இந்தச் சுடுகாட்டில் சடலத்தைப் புதைக்க அனுமதி இல்லை. எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள கிறிஸ்த வர் யாராவது இறந்துவிட்டால், அந்த சடலத்தை 8 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள காசிமேடு அல்லது 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரம்பூர் இடுகாட்டிற்கும் எடுத்துச் செல்கின்றனர் என்றார் அவர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வியாசர்பாடி எரிவாயு தகனமேடை பழுதடைந் துள்ளது. அதனை இயக்கி வந்த ஜூவாலா என்ற தனியார் நிறுவனத் தின் ஒப்பந்த காலம் முடிந்து 8 மாதங்கள் ஆகிவிட்டது.
எரிவாயு தகனமேடையைப் பழுது நீக்கி, மீண்டும் 3 ஆண்டுகளுக்கு டெண்டர் விட இருக்கிறோம். மாநக ராட்சி நிதி ஒதுக்கியதும், பழுதுபார்ப் புப் பணி தொடங்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago