பொது இடங்களில் புகை பிடிக்க மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. ஆனாலும், அதை தீவிரமாக அமல்படுத்த மாநில அரசுகள், அதிகாரிகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனால், பஸ் நிறுத்தங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் புகை பிடிப்பதும், சிகரெட் விற்பனையும் தடையற நடக்கின்றன.
பல ஆயிரம் கோடி முதலீட் டில் புகையிலைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பெரு நிறுவனங்கள், புகையிலைப் பொருட்கள் மீது தடை விதிக் கப்படுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், சிகரெட் விற்பனையைக் கட்டுப்ப டுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான பரிந்துரைகளை அளிக்க மத்திய அரசு அமைத்த ரமேஷ் சந்திரா குழு தனது அறிக் கையை சமீபத்தில் அளித்துள்ளது. ‘கடைகளில் சிகரெட்டை உதிரியாக விற்காமல், மொத்தமாக பாக்கெட் டாக மட்டுமே விற்பனை செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்கவேண்டும். 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட் களை விற்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்ட போது அவர் கள் கூறியதாவது:
சாம்சன், கல்லூரி மாணவர், எழும்பூர்:
தினமும் 5 அல்லது 6 சிகரெட் புகைக்கிறேன். பாக் கெட்டாக வாங்கினால், பிடித்தது போக மீதியை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும். ரூ.100 கொடுத்து முழு பாக்கெட் வாங்குவதும் சிரமம். எனவே, அந்த விதிமுறை அமலுக்கு வந்தால் அனேகமாக புகைப்பதை நிறுத்திவிடுவேன்.
சங்கர், பெட்டிக்கடை, அண்ணா சாலை:
பெட்டிக் கடையில் வியாபாரம் என்றாலே அது சிகரெட் தான். குட்காவுக்குத் தடை, சிகரெட் டுக்கு கட்டுப்பாடு என்று தொடர்ந் தால் வியாபாரமே செய்ய முடியாது. பலரும் ஒவ்வொரு சிகரெட்டாகத்தான் புகைப்பார்கள். இந்த சட்டம் வந்தால், பலர் கடைக்கு வரவே மாட்டார்கள். வியாபாரம் படுத்துவிடும்.
கோபி, டீக்கடை, செம்பியம்:
சிகரெட் விற்பதால்தான் டீக் கடைக்கே பலர் வருகிறார்கள். அவர்களைப் போய் ‘ஒரு பாக்கெட் வாங்கு’ என்றால் கடைக்கே வரமாட்டார்கள். சிகரெட் விற்பனை குறைவதோடு, டீ வியாபாரமும் பாதிக்கப்படும்.
சேர்மன்துரை, தொழில்முனைவர், சிந்தாதிரிப்பேட்டை:
எப்போதுமே பாக்கெட்டாகத்தான் வாங்குகி றேன். அதுதான் வசதியும்கூட. தேவைப்படும்போது புகைக்க லாம். சட்டம் வந்தால் எதுவும் மாறப் போவதில்லை.
செந்தில்குமார், சிகரெட் மொத்த வியாபாரி:
சிகரெட் விலை அதிகமானதில் இருந்தே வாங்குவோர் எண்ணிக்கை குறைந் துள்ளது. இந்த கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்தால், விற்பனை மேலும் குறையும்.
ராஜூ, தனியார் ஊழியர், அயனாவரம்:
புகைக்கவேண்டும் போலிருந்தால் அருகே உள்ள கடைக்குப் போய் ஒரு சிகரெட் வாங்குகிறோம். சில நேரங்களில் சோம்பல், பணிப் பளு காரணமாக அதை தள்ளிப் போடவும் செய்கிறோம்.
இதனால் சிகரெட் பிடிப்பது குறைகிறது. பாக்கெட்டாகத் தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத் தினால், நாங்களும் வாங்கி வைத்துக் கொள்வோம். இதனால் நினைத்தநேரத்தில் புகைக்க முடியும்.
ஒரு நாளுக்கு 5 சிகரெட் புகைக் கும் நான் 10 சிகரெட் புகைக்க ஆரம்பிப்பேன். இது குடும்ப பொருளாதாரத்தை பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago