கிறிஸ்துமஸ் பண்டிகை புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 24) நள்ளிரவு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர் களால் கோலாகலமாக கொண் டாடப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக களைகட்டியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்க ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல, கிறிஸ் துமஸ் கேக்குகள், இனிப்புகள் வாங்குவதற்காக பேக்கரிகளிலும், இனிப்பு கடைகளிலும் முன்கூட்டியே ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று சிறப்பு ஆராதனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. சாந்தோம் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிச்சாமி தலைமையில் இரவு 11 மணிக்கு தமிழில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும் என்று அதிபர்-பங்குத்தந்தை அருட்திரு காணிக்கைராஜ் தெரிவித்தார். இங்கு இரவு 9 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறுகிறது.
இதேபோல், ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கதீட்ரல் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலத் திலும், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெரம்பூர் வெஸ்லி ஆலயத்தில் தமிழிலும் பேராயர் வி.தேவசகாயம் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெறும் என்று போதகர் ஒய்.எல்.பாபு ராவ் தெரிவித்தார்.
லஸ் சர்ச்
பெசன்ட் நகர் அன்னை வேளாங் கண்ணி ஆலயத்தில் இன்று இரவு 9 மணிக்கு ஆங்கிலத்திலும், இரவு 11.30 மணிக்கு தமிழிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி-ஆராதனை நடைபெறும் என்று ஆலயத்தின் அதிபரும் பங்குத்தந்தையுமான அருட்திரு பிரான்சிஸ் மைக்கேல் கூறினார்.
லஸ் சர்ச் என்று அழைக்கப்படும் மைலாப்பூர் லஸ் கார்னர் பிரகாச மாதா ஆலயத்தில் இரவு 9 மணிக்கு ஆங்கிலத்திலும், நள்ளிரவு 12 மணிக்கு தமிழிலும் கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெறும் என்று பங்குத்தந்தை அருட்திரு ராயன்னா தெரிவித்தார். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறுகிறது. மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயத்தில் நள்ளிரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும் என்று பங்குதந்தை அருட்திரு பால்ராஜ் தெரிவித்தார். பல்வேறு கிறிஸ்தவ சபைகளிலும் இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
10 hours ago