விமான நிலையத்தில் வாகனங்களை இனிமேல் கட்டணமின்றி 10 நிமிடம் நிறுத்திகொள்ளலாம்: சென்னையில் ஏப்.1 முதல் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களுக்குள் சென்று 10 நிமிடங்களுக்குள் வெளியேறும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் இல்லை.

இது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய துணை பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தற்போது சென்னை விமான நிலையத்துக்குள் சென்று 5 நிமிடங்களுக்குள் வெளியேறும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் ஆனால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நேரம் 10 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்கும் கூடுதலாக விமான நிலைய வளாகத்தில் இருக்கும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு பயன் ஏற்படும் வகையிலும் விமான நிலையப் பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையிலும் இப்புதிய சலுகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்