தமிழகம் முழுவதும் புதிய திட்டம் அமல்; ஓட்டுநர் உரிமம் பெறஆன்லைனில் விண்ணப்பம்: இடைத்தரகர், போலி உரிமத்தை ஒழிக்க நடவடிக்கை

By கி.ஜெயப்பிரகாஷ்

ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லை னில் விண்ணப்பிக்கும் வசதி தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இடைத்தரகர்கள், போலி உரிமம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. இதுதவிர, 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக 6,210 பேர் புதியவாகனங்களைப் பதிவு செய்கின்ற னர். வாகனங்களுக்குப் பதிவு எண்வழங்குதல், ஆட்டோ உரிமையா ளர்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளும் இங்கு நடக்கின் றன.

போலி ஓட்டுநர் உரிமங்களை ஒழித்து, ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர் உரிமம் பெறுவது, தகுதிச் சான்று பெறுவது, வாகன வரி செலுத்துவது, புதிய வாகனங்கள் பதிவு, கட்டண வசூல் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் மேற் கொள்ளும் வசதி படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கள் ‘தி இந்து’விடம் மேலும் கூறியதாவது:

மார்ச் 1-ம் தேதி முதல்...

நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை தரம் உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. ஒட்டுமொத்தமாக உள்ள 30 சதவீத போலி ஓட்டுநர் உரிமங்களை ஒழிக்க இந்த புதிய திட்டம் செயல்படுத் தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, மார்ச் 1-ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்களில் இனிவிண்ணப்பம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆன்லைனில் ( >www.parivahan.gov.in/sarathi) முழு தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவுடன் சம்பந்தப் பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அவரை நேரில் அழைத்து, ஆவணங்களைச் சரி

பார்த்த பிறகு, எல்எல்ஆர் (ஓட்டுநர் பழகுநர் உரிமம்) வழங்குவார்கள். அடுத்த 6 மாதங்களில் பயிற்சி முடித்த பிறகு, வாகனத்தை ஓட்டிக் காட்டி, ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம். சில ஆர்டிஓ அலுவலகங்களில் முன் னோட்டமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க...

இதேபோல வாகன தகுதிச் சான்று, வாகனப் பதிவு, முகவரிமாற்றம், கட்டணம் செலுத்து தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்புஉள்ளிட்ட பணிகளையும் ஆன் லைனில் மேற்கொள்வதற்கான வசதி வரும் 15-ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்