தண்ணீர் உள்ள இடங்களிலி ருந்து குழாய்கள் மூலம் நீரைக் கொண்டுசென்று, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் எஞ்சியுள்ள தென்னை மரங்களையாவது காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. ஏறத்தாழ 1.20 கோடி தென்னை மரங்கள் உள்ளன.
பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, நெகமம், ஆனைமலை, சூலூர் பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக தென்னை மரங்களே விளங்குகின்றன.
பருவமழை பொய்த்ததால் கிணத்துக்கடவு, நெகமம், சூலூர், சுல்தான்பேட்டை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவமழை இரண்டுமே பொய்த்ததால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் நிலத்தடிநீர் 1,000 அடி முதல் 1,300 அடிக்கு கீழே சென்றுவிட்டது. ஓடைகளும் முற்றிலும் வறண்டுவிட்டன. அதனால் ஏறத்தாழ 40 சதவீத தென்னை மரங்கள் கருகி காய்ந்துள்ளன. பெரும்பாலான மரங்களில் தென்னை மட்டைகள், காய்கள் உதிர்ந்து, மொட்டை மரங்களாக காட்சியளிக்கின்றன.
இதுகுறித்து நெகமம், காம நாயக்கன்பாளையம், சுல்தான் பேட்டை பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஒரு ஏக்கரில் சுமார் 80 தென்னை மரங்கள் வளர்கின்றன. ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் பலன் தரும். ஒவ்வொரு தென்னையிலும் ஆண்டுக்கு 180 தேங்காய் கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பகுதிகளில் மழை இல்லை. இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தியும், சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தும், லாரி நீரை விலைக்கு வாங்கி ஊற்றியும், முடிந்தவரை தென்னை மரங்களைப் பாதுகாத்தோம். ஒரு கட்டத்தில் எங் களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு தோப்பில் 300 மரங்கள் இருந்தால், அவற்றில் 100 மரங் களுக்குமேல் பட்டுப்போய்விட்டன. இதற்காக அதிகாரிகள் கொடுத்த நிவாரணத் தொகை, மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் கூலிக்குகூட போதவில்லை.
சிறு, சிறு தோட்டங்கள், அதைச் சார்ந்த தோட்டச் சாலைகளிலும் 10 முதல் 30 தென்னை மரங்கள் வரை வளர்க்கப்பட்டுள்ளன. அவையும் தற்போது காய்ந்து விழுந்துவிட்டன. என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர் என்றனர்.
இது தொடர்பாக அரசு உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால், விவசாயிகளின் மரணம், தற்கொலைகளைத் தடுக்க முடியாது என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி ‘தி இந்து’விடம் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் நிலத்தடிநீர் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. விவசாயக் கூலிக்கு போதுமான ஆட்களும் கிடைப்பதில்லை. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தென்னை விவசாயத்துக்கு மாறிவிட்டனர்.
இதனால்தான் மற்ற மாவட்டங் களைக் காட்டிலும் கோவை மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில், மாவட்டத்தின் தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிக அளவில் தென்னை மரங்கள் தற்போது கருகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன், மத்திய வறட்சி நிவாரணக் குழுவினர் கருகிய தென்னை மரங் களைப் பார்வையிட்டனர். மேலும், ஹெக்டேருக்கு ரூ.13,500 முதல் ரூ.18 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.
எனினும், விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே, நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.
தற்போது 40 சதவீத தென்னை மரங்கள் காய்ந்து, அழிந்துவிட்டன. மேலும், 50 சதவீத தென்னை மரங்களும் கருகும் நிலையில் உள்ளன. எனவே, அவற்றைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாய்க்கால்களில் வரும் நீரை குழாய்கள் மூலம் தென்னந்தோப்பு களுக்கு கொண்டுசென்று, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் மரங்களுக்கு தண்ணீர்விட வேண்டும். இல்லையேல், இன் னும் சில வாரங்களில் தென்னை மரங்கள் முற்றிலுமாக கருகிவிடும் அபாயம் உள்ளது” என்றார்.
கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், அவிநாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களில், பாதி மரங்கள் பயனற்றுப் போய்விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago