தங்கம் விலை மீண்டும் சரிவு: பவுனுக்கு ரூ.256 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.256 குறைந்து, ஒரு பவுன் ரூ.19,464-க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 குறைந்தது. 10 நாளில் பவுனுக்கு ஆயிரம் ரூபாய்க்குமேல் குறைந்த தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி திடீரென பவுனுக்கு ரூ.352 உயர்ந்தது. இதனால், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக நேற்று முன்தினம் தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.256 குறைந்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,465-க்கு விற்கப்பட்ட தங்கம், நேற்று கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.2,433-க்கு விற்கப்பட்டது. பவுனுக்கு ரூ.256 குறைந்து ரூ.19,464-க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில் நிறுவனங் களின் பங்கு விற்பனை அதிகரித் துள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துவிட்டது. இதனால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE