ஆவின் பால் கலப்பட வழக்கில் 23 பேர் மீது குற்றப்பத்திரிகை

By செய்திப்பிரிவு

ஆவின்பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி உட்பட 23 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஆவின் பால் கலப்பட வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த வைத்தியநாதனை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த சுரேஷ், சத்தியராஜ், ரமேஷ், வேலூர் மாவட்டம் ராணிபேட்டையை சேர்ந்த குணா, முருகன், அன்பரசன், சுரேஷ், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பால்கோவா நிறுவன உரிமையாளர்கள் சந்திரசேகர், சுதாகரன், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பால்பண்ணை மேலாளர் அர்ச்சுனன், வேலூர் மாவட்டம் திரு.வி.க. நகரை சேர்ந்த துரை, திருப்பூர் மாவட்டம் கொடவாய் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன், ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த சென்னியப்பன், ஆரணியைச் சேர்ந்த சலீம், துரை, காத்தவராயன், சென்னியப்பன், தினகரன் ஆகிய 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நேற்று விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிபதி குமார் சரவணன் முன்பு தாக்கல் செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் உட்பட 19 பேர் பெயரும் மேலும் தலைமறைவாக உள்ள வைத்தியநாதன் மனைவி ரேவதி, பால் தரக்கட்டுப்பாட்டாளர் அப்துல் ரகீம் உட்ப 4 பேர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE