செண்டூர் வெடிவிபத்து வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

By எஸ்.நீலவண்ணன்

திண்டிவனம் செண்டூர் கிராமத்தில் 2007-ம் ஆண்டு நடந்த வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடந்த வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு திண்டிவனம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம திண்டிவனம் அருகே செண்டூர் என்ற கிராமத்தில், கடந்த 2007- ம் வருடம், ஏப்ரல் 7 ம் தேதி வெடிபொருட்களை ஏற்றி வந்த மினிவேன் வெடித்து சிதறியது. இவ்விபத்தில் 16 பேர் பலியானார்கள்.

இது தொடர்பாக மயிலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வெடிவிபத்து குறித்து விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அப்போதையை வருவாய் நிர்வாகத் துறை ஆணையருமான எம்.எஃப் பரூக்கி தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.பின்னர் அவர் அரசிடம் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு திண்டிவனம் 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கு விசாரணையின் போதே மூன்று பேர் மரணமடைந்து விட்டனர். இந்த வழக்கில், மணலிப்பட்டு சேகர், நாகப்பன், அண்ணாமலை ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று நீதிபதி செல்வமுத்துகுமாரி தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்