வேலூர் பெண்கள் மத்திய சிறையில் நளினி-முருகன் சந்திப்பு சுமூகமான முறையில் சனிக்கிழமை நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் கணவன்-மனைவி என்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை சனிக்கிழமை நாளில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொள்ள அனுமதி உள்ளது.
கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஆண்கள் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு முருகன் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சந்திப்பின்போது மனைவியுடன் நெருக்கத்தில் பேச வேண்டும் என முருகன் விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் முருகன் 2 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். சிறை அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இதற்கிடையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த சந்திப்பின்போது பழைய கோரிக்கையை முருகன் வலியுறுத்தினார். இதனை ஏற்க சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தால் மனைவியுடனான சந்திப்பை அவர் ரத்து செய்துவிட்டு ஆண்கள் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில், சனிக்கிழமை (18-ம் தேதி) நளினி-முருகன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கம்போல போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட முருகன், மனைவி நளினியுடன் 30 நிமிடங்கள்
சந்தித்து பேசினார். இருவரின் வழக்கமான சந்திப்பு எந்த சிக்கல் இல்லாமல் இருந்ததால் சிறை அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago