முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசு ஒத்துழைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே.துரை மாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடியாகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இதன் கதவுகளை கேரள அரசு மாற்றியமைத்து, அதன் நீர் மட்டத்தை 132 அடியாக குறைத்துவிட்டது.

நீதிமன்ற தீர்ப்புகளை கண்டு கொள்ளாமல், 132 அடிக்கு மேல் நீர் தேக்கினால் ஆபத்து என்று தொடர்ந்து கூறி வந்தது. தற்போது, உச்ச நீதிமன்றத்தின் 3 நிபுணர் குழு ஆய்வு செய்து ‘அணை உறுதியாக இருக்கிறது; 142 அடி வரை நீரை தேக்கலாம். மேலும் பேபி அணையில் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு 152 அடி வரை நீரை தேக்கலாம்’ என்று கூறியுள்ளது. எனவே கேரள அரசு பிடிவாதத்தை கைவிட்டு குழுவின் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE