சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

காலியாக இருந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்களில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரையும், சென்னை பல்கலைகழகத்தின் துணை வேந்தராக துரைசாமியும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாறுதல்கள் செய்து சட்ட திருத்தம் ஒன்றையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இது குறித்து கூறிய அன்பழகன், ''இந்த புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் இனி வரும் காலங்களில் துணைவேந்தர் நியமனத்தில் எந்த தாமதமும் ஏற்படாது, ஒரு துணை வேந்தர் ஓய்வு பெறுவதற்கு 6 மாதம் முன்பே புதிய துணைவேந்தருக்கான தேடுதல் பணி தொடங்கிவிடும்'' என்று கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும், துணைவேந்தர் தேர்வில் ஆளுநர் இன்னும் ஒரு முடிவுக்கு வராத காரணத்தால் தற்போதைக்கு துணை வேந்தரை நியமனம் செய்யவில்லை என்றும், 3 அல்லது 4 மாதங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படுவார் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்