திண்டிவனம் அருகே பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்ற திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திண்டிவனம் அருகே கீழ்அருங் குணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. இதனையொட்டி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக் கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து காரில் திருமாவளவன் புறப்பட்டார். வானூர் அருகே தைலா புரத்தைச் சென்றடைந்த போது அவருடைய காரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்ளிட்ட போலீஸார் வழிமறித்தனர்.
அப்போது திருமாவளவனிடம், `நீங்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினால் அந்தப் பகுதியில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ் நிலை உள்ளது. இதனால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடையாது’ என்று போலீஸார் தெரிவித்தனர்.
அப்போது திருமாவளவனும், அவருடன் வந்த கட்சி நிர்வாகி களும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருமாவளவன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் வந்த காரிலேயே திரும்பி சென்னைக்குச் சென்றார். இதனால் நடைபெற இருந்த பொதுக்கூட்டமும் ரத்து செய்யப் பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago