தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இயல்புக்கும் குறைவான மழையே பெய்ததால் அணைகள், கண்மாய்கள், ஏரிகள் வறண்டு நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வருவதால், காய்கறி உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது (முதலிடத்தில் சீனா). தேசிய தோட்டக்கலை வாரியத்தின் 2015-16-ம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் 10 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில் பருவமழை எதிர் பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, சமீபத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றிவிட்டது. அத னால், அணைகள், கண்மாய்கள், ஏரிகள் வறண்டு விவசாயப் பாசனத்துக்கு பெரிதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல், வாழை, கரும்பு, காய்கறி கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை, இந்த வறட்சியை சமாளிக்க தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் காய் கறிகள், சிறுதானியம், பயறு வகைகளைப் பயிரிட விவசாயிக ளுக்கு அறிவுரை வழங்கியது. அதனால், இந்த ஆண்டு காய்கறி உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை பொறியாளர் பிரிட்டோராஜ் கூறிய தாவது:
தமிழகத்தில் கடந்த 6 ஆண்டு களாக, பெரும்பாலான பகுதிகளில் இயல்புக்கும் குறைவான மழையே பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வருகிறது. மழைக் காலம் முடிந்துள்ள நிலையில், மழைநீர் சேமிப்பு அமைப்புகளில் நீரைச் சேமிக்க இயலாததால், இருக்கும் நிலத்தடி நீரை, விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், இருக்கிற நீரை அளவாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும். தற்போது மழை பெய்யாததால் ஆடிப்பட்டம், தைப்பட்டம் விவசாய சாகுபடி பாதிக்கும். தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் அபாயம் உள்ளது. இதற்கு நீர்ச் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள், மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
புதிய ஆழ்துளைக் கிணறு களை அமைப்பதை தவிர்க்க வேண்டும். குளங்கள் வறண்டுள் ளதால் நிலத்தடியில் உள்ள நீர்த் தாங்கிகளும், ஊற்றும் வறண்டிருக் கும். நீர் தேடி அதிக ஆழத்தில் ஆழ் துளைக் கிணறுகள் அமைக்க நேரிடும். அதிலும் நீர் கிடைப்பது உறுதியில்லை. அடுத்த மழை பெய்து குளங்கள் நிரம்பிய பின் புதிய ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கலாம். நீர்த் தேவை அதிகமுள்ள நெல், கரும்பு வாழை பயிரிடுவதைத் தவிர்த்து நீர்த் தேவை குறைந்த சிறுதானி யம் பயிறு வகைகளை விதைப் பது சிறந்தது. அவற்றுக்கு எதிர் காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்றார்.
அதிக பலன் தரும் கூட்டுப் பண்ணையம்
தற்போது இருக்கும் நீரை அப்படியே பயிர்களுக்கு பாய்ச்சுவதைவிட, மதிப்பு கூட்டி இயற்கை இடுபொருட்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம் இ.எம் கரைசல் கலந்து மாலை வேளையில் கொடுத்தால் வரும் வெயில் காலத்தில் நல்ல பலனைக் கொடுக்கும். இதற்கு குறைந்த நீரே போதுமானது. இருக்கும் நீரை காலை, மாலையில் பிரித்து பாய்ச்சுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். காலையில் கொடுப்பது பயிர்கள் உணவு தயாரிக்கவும் மாலையில் தருவது உணவு பயிர் வளர்ச்சிக்கு பயனாக மாறவும் உதவும். சொட்டுநீர் பாசனத்தில் பயன்படுத்தப்படும் குழாயின் நீர் வெளியேறும் அளவைக் குறைத்து வைக்க வேண்டும். இதனால் நீர் விரயத்தைக் குறைப்பதுடன் வேர்களுக்குத் தேவையான நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். அதிக திறனுள்ள மோட்டார்களை பயன்படுத்துவதைவிட நீர் செறிவுக்கு ஏற்ற வகையிலான, அதிக நேரம் பயன்படுத்தக் கூடிய வகையிலான குறைந்த திறனுள்ள மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். நிலத்தில் உள்ள உப்பை நீக்க அல்லது குறைக்க இ.எம் போன்ற இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்த வேண்டும். கூட்டுப் பண்ணையம் அதிக பலன் தரும் என வேளாண்மை பொறியாளர் பிரிட்டோராஜ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago