மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு?- முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் திட்டம்

By குள.சண்முகசுந்தரம்

16 வது மக்களவைத் தேர்தலுக் கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளி யாகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடர் 21-ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனாலும், 14-ம் தேதியுடன் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கவும் வாய்ப்பிருப் பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி. ஒருவர் 5-ம் தேதி மாலை ’தி இந்து’விடம் கூறியதாவது: இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக மொத்தம் 24 மசோதாக்கள் தயாராக உள்ளன. இதில் 6 மசோதாக்கள் ஊழல் தடுப்பு சம்பந்தப்பட்டவை. இதுதவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் மசோதா, மதவாதத் தடுப்பு சம்பந்தப்பட்ட மசோதா உள்ளிட்ட வேறு சில முக்கிய மசோதாக்களும் இருக்கின்றன. இந்த மதவாத தடுப்பு மசோதா நிறைவேறினால் சிறுபான்மையினரின் ஆதரவை காங்கிரஸ் பெறமுடியும். அதே போல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறினாலும் காங் கிரஸின் செல்வாக்கு உயரும்.

நடப்பு கூட்டத் தொடர் முடிந்ததுமே நாடாளுமன்றத் தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பும் வெளியாகிவிடும். தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்த வரை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இந்தமுறையும் ஆறேழு கட்டங்களாக நாடாளு மன்றத் தேர்தலை நடத்தும் திட்டத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம். இவ்வாறு அந்த எம்.பி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்