தமிழகம் - கர்நாடக எல்லையில் பேருந்துகள் 17-வது நாளாக நிறுத்தம்: கண்காணிப்பு கேமரா பொருத்தி கர்நாடக போலீஸார் ஆய்வு

By எஸ்.கே.ரமேஷ்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாண்டியா, மைசூரு உள்ளிட்ட பல இடங்களில் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால், கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் இருந்து பேருந்துகள் கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படவில்லை. இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து 11-ம் தேதி ஒரு நாள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் தமிழக வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இரு மாநில எல்லையிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இரு மாநில இருசக்கர வாகனங்கள் முதல் கார், லாரி, பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் அந்தந்த மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

நேற்று 17-வது நாளாக தமிழக வாகனங்கள் மாநில எல்லையான ஜூஜூவாடியிலும், கர்நாடக வாகனங்கள் அத்திப்பள்ளியிலும் நிறுத்தப்பட்டன. இதனால் பணிக்கு செல்வோர், பயணிகள் சிரமத்துடன் நடந்து சென்றனர்.

மாநில எல்லையை கடந்து பாகலூர், வேப்பனப்பள்ளி சாலை வழியாக தமிழகத்துக்குள் வரும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களை போலீஸார், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தடுத்து மீண்டும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் சரக்கு பாரத்துடன் ஜூஜூவாடி, சிப்காட், சூளகிரி, சின்னாறு வரை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. சாலையோரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஓட்டுநர்களும் உதவியாளர்களும் சிரமத்துடன் சாலையிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இரு மாநில போக்குவரத்து பாதிப்பால், தொழிற்சாலைகளில் உற்பத்திப் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. காய்கறிகள், மலர்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள, கர்நாடக போலீஸார் நேற்று முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். விதிகளை மீறிச் செல்லும் வாகனங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்