கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் எலுமிச்சை விளைச்சல் வெகுவாகக் குறைந் துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.150 வரை நேற்று விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பகுதியில் அதிக அளவில் எலுமிச்சை விளைவிக் கப்படுகிறது. சிறுமலை, அய்யம் பாளையம் பகுதிகளில் விளையும் எலுமிச்சை திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை ஷெட் கமிஷன் கடைகளுக்கும், பாச்சலூர் மலைப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை ஒட்டன்சத்திரம் சந்தைக்கும் விற்பனைக் குக் கொண்டுசெல்லப்படு கின்றன.
வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் திண்டுக்கல் சந்தையில் எலு மிச்சை மொத்தமாக ஏலம் விடப் படுகிறது. திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 55 கிலோ எடையுள்ள எலுமிச்சை மூட்டை அதிகபட்சமாக 8,200 ரூபாய்க்கு விற்பனையானது. சிறிய அள விலான காய்கள் 55 கிலோ மூட்டை 6,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி கூறும்போது, “கடந்த 2 ஆண்டு களாக எலுமிச்சை வளர்ச்சிக்கு தேவையான மழை இல்லை. இதனால் காய்கள் விளைச்சல் குறைந்துவிட்டது. காய்கள் அளவு பெருக்காமல் சிறியதாகவே பழுத்துவிடுகிறது. காய்கள் பெருத்து நிறம் கூடினால்தான் அதிக விலை கிடைக்கும். வரத்து குறைந்ததால் விலையும் அதிகரித்துள்ளது. அதிக மழை பெய்து எலுமிச்சை விளைச்சல் அதிகரித்தால்தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஜனவரி வரை இந்த நிலைதான் நீடிக்கும்” என்றார்.
வியாபாரி பார்வதி கூறும் போது, “சிறிய எலுமிச்சை 5 ரூபாய்க்கும், பெரிய எலுமிச்சை 7 ரூபாய்க்கும் விற்கிறோம். ஏலம் எடுக்க போட்டி இருப்பதால் விலை அதிகமாக உள்ளது. இதனால் சிலர் வாங்காமல் செல்கின்றனர். விலை குறைந் தால்தான் எங்களுக்கும் கட்டுப் படியாகும்” என்றார்.
அதிக மழை பெய்து எலுமிச்சை விளைச்சல் அதிகரித்தால்தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஜனவரி வரை இந்த நிலைதான் நீடிக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago