கூட்டுறவு வார விழாவில் ரூ.1 கோடி கடனுதவி அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளூரில் நடைபெற்ற கூட் டுறவு வார விழாவில், ரூ.1.09 கோடி மதிப்புள்ள கடனுதவிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

திருவள்ளுரில் 61-வது அனைத் திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் பங்கேற்று, ரூ.1.09 கோடிக்கான கடனுதவிகளையும், கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

இவ்விழாவில், அமைச்சர் பி.வி.ரமணா பேசும்போது, ‘தமிழக அரசு வேளாண் துறையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதுடன், விவசாயம் செய்ய குறைந்த வாடகைக்கு விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளுர் எம்.பி., பி.வேணுகோபால், எம்எல்ஏக்கள் ஆர்.மணிமாறன், பொன் ராஜா, எஸ்.வேதச்சலம், மு.அருண் சுப்பரமணியன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொன்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE