மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் தனித்து போட்டியிடப் போவதாக பாமக அறிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பாமக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத் தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும், புதுச்சேரியில் பாமகவை மதிக்காமல் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து வேட்பாளரை அறிவித்துள்ளது. பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இறுதியில் அனந்தராமன் பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு இந்திராநகர் இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் பாமக
இருந்தது. அதனால் மக்களவைத் தேர்தலில் வேட்பாளரை அறிவிக் கும் முன்பு முதல்வர் ரங்கசாமியை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அவரது ஒப்புதலுடன்தான் புதுச் சேரிக்கு பாமக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
முதல்வர் ரங்கசாமியை, அன்புமணி 4 முறை நேரிலும், ராமதாஸ் பல முறை தொலை பேசியிலும் பேசி ஆதரவு கேட்ட னர். அன்புமணி அவரை சந்திக்க வந்தபோது பலமணி நேரம் காக்க வைத்தே முதல்வர் சந்தித்தார். அப்போது கனிவுடன் பரிசீலிப்பதாக கூறிவிட்டு, தற்போது வேட்பாளரை ரங்கசாமி அறிவித்து விட்டார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக இருந்தாலும், புதுச்சேரியில் தனித்து போட்டியிடுகிறது. புதுச் சேரியிலும் நாங்கள் மோடி பிரதம ராகத் தான் வாக்கு சேகரிப்போம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், "புதுவையில் தனித்து போட்டியிட ராமதாஸ் ஒப்புதல் தந்துள்ளார். தனித்து போட்டியிடுகிறோம். வாபஸ் பெறமாட்டோம். வரும் 22-ம் தேதி நடக்கும் மகளிர் மாநாட்டில் ராமதாஸ் பங்கேற்கிறார்" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago