மூப்பனார் எந்த தியாகமும் செய்யவில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

காங்கிரஸ் கட்சிக்காக மூப்பனார் எந்த தியாகமும் செய்யவில்லை. இனிமேல் காங்கிரஸில் அவரை முன்னிறுத்த மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:

குஷ்பு காங்கிரஸில் சேர்ந்திருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எடுத்துள்ளது சரியான முடிவு. மக்களை சந்திக்க விரும்புவதாக குஷ்பு கூறியுள்ளார். இது அவரது உழைக்கும் குணத்தைக் காட்டு கிறது. மின் பற்றாக்குறை காரணமாக தனியாரிடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்குகிறது. நெய்வேலி, கூடங் குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், யூனிட் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தனியாரிடமோ ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.15 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

ரூ.400 கோடிக்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ.1200 கோடி கொடுத்து வாங்குகின்றனர். இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று பகிரங்கமா கவே கூறுகிறேன். இதற்கு காரணமானவர் அமைச்சரா, அதிகாரிகளா என்று விசாரித்து முதல்வர் பன்னீர்செல்வம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி, காமராஜரை மட்டுமே முன்னிலைப்படுத்தும். காமராஜரின் படங்கள் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிகூட நடக்காது. ஆனால், மூப்பனாரை வைத்து கட்சி நடத்த மாட்டோம். அவரது மகன் ஜி.கே.வாசன் கட்சி தொடங்கியுள்ளார். தந்தையின் புகழை அவரது மகனே பரப்புவார் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE