கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூருக்கு நேற்று பிற்பகல் சென்ற தனியார் பேருந்து மேலுமலை அருகே சென்றபோது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது. பேருந்தின் பின்னால் வந்த 2 கார்களும் விபத்தில் சிக்கிக் கொண்டன. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிவரன் கூறும்போது, ‘விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை இன்றே (நேற்று) பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரேத பரிசோதனைக்குப் பின் சடலங்கள் இலவச ஊர்திகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சை பெற, அவர்கள் விரும்பும் மருத்துவமனைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்றார்.
அதிகரிக்கும் விபத்துகள்
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் இடையே மேலுமலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உயர்ந்தவாறு செல்கிறது. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் அனைத்து வாகனங்களும், பள்ளத்தில் அதிவேகமாக வரும். இதனால் மேலுமலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்த பகுதியில் உயரமான தடுப்புச்சுவர்களும், மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் அவ்வழியே இருசக்கர வாகனங்களில் சென்ற பலர், தங்களது வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக இளைஞர்கள் பலர் வேதனை தெரிவித்தனர்.
மதுபோதையில் லாரி ஓட்டுநர்?
கோர விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுனர், மதுபோதையில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. லாரி கவிழ்ந்து நிலக்கடலை மூட்டைகள் சிதறிக் கிடந்த இடத்தில், கர்நாடக மாநில மது பாட்டில் ஒன்றும் கிடந்தது குறிப்பிடத்தக்கது.
சிரமம்
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில், உறவினர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பல்வேறு பணி நிமித்தமாக வந்தவர்கள், விபத்து நிகழ்ந்த பேருந்தில் பயணம் செய்தார்களா என்பது குறித்து உறவினர்கள் செல்போன் மூலம் தொடர்ந்து விசாரித்தபடி இருந்தனர். பலர் மருத்துவமனைக்கு நேரடியாகப் பேசி உறுதிப்படுத்திய பின்னரே நிம்மதியடைந்தனர்.
தருமபுரியில் சிகிச்சை
விபத்தில் காயமடைந்த தட்சிணாமூர்த்தி(40), தருமபுரி அடுத்த நூலஅள்ளியைச் சேர்ந்த ராஜா(30), கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி குமரேசன்(35) ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மேலும் 2 பேர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விதிமீறலும், விபத்துகளும்
அதிவேகம், மதுபோதையில் வாகனம் இயக்குதல் உள்ளிட்ட விதிமீறில் காரணமாக ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஆண்டுதோறும் விபத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்
கந்திகுப்பம் அருகே பையம்பட்டியைச் சேர்ந்த பெண் முனிரத்தினம்(55), வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ்(36), அவரது மகள் வம்ஷிதா(12).
தனியார் பேருந்து ஓட்டுநர் வெங்கட்ராஜ், நடத்துனர் தர். இதில் நடத்துனர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்களின் விவரங்கள் தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago