சிபிஎஸ்இ பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இன்டர்நெட், இமெயில், பேஸ்புக்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் இன்டர்நெட், இமெயில், இ-பேங்கிங், இ-காமர்ஸ், இ-டிக்கெட், சமூகவலைதளங்கள் தொடர்பான பாடங்கள் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

மத்திய அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் போன்றவர்கள் மாறி மாறி வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றும் சூழல் இருப்பதால், அவர்களது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுவதும், புதிய பாடங்கள் சேர்க்கப்படுவதும் வழக்கம்.

அந்த வகையில், 12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக புதிய பாடங்களைச் சேர்க்க சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது. இதன்படி தகவல்தொடர்பு முறை கள் (கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம்ஸ்) பாடப்பிரிவில் இன்டர்நெட், நெட்வொர்க்கிங், இமெயில், இ-பேங்கிங், இ-காமர்ஸ், இ-டிக் கெட், சமூகவலைதளங்கள் (பேஸ்புக், டுவிட்டர் போன்றவை) உள்ளிட்ட பாடங்கள் கூடுதலாக இடம்பெறும். இவை பற்றிய அடிப் படை அறிவை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் இருக்கும். நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இணையதளத்தில் வெளியீடு

இந்த புதிய பாடங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல், பாடப் புத்தகத்தில் புதிய பாடங்கள் அச்சிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE