மாமல்லபுரம் சுற்றுலா தலம் அருகே சமூக விரோதிகள் அட்டூழியம்: திருட்டு பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மாமல்லபுரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சமூக விரோதிகள் திருட்டு பொருட்களை எரித்து இரும்பு மற்றும் செப்பு உருக்கு தயாரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமை யாக மாசுபடுவதாக புகார் எழுந் துள்ளது. மேலும் புகை மூட்டத் தினால், சுற்றுலாப் பணிகள் அவதிய டைவதாகவும் குற்றம்சாட்டப் படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரத்தில் பல்லவ மன்னர்களின் கலைத்திறனை பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட கலைஅம்சங்கள் சிற்பங்கள் நிறைந் துள்ளன. இவற்றை கண்டு ரசிப்பதற்காக, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்று லாப் பயணிகள் மாமல்லபுரம் வருகின்றனர். இதனால், மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா பகுதிகள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள் ளன. தொல்லியல்துறை மூலம் பாதுகாவலர்கள் நியமிக் கப்பட்டு அனைத்து சுற்றுலா பகுதிகளும் 24 மணி நேரமும் பாதுகாக்கப்படுவதோடு பராமரிக் கப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில், சுற்றுலா தலங்களின் அருகே சமூக விரோதகள் சிலர் திருட்டு பொருட் களை எரித்து செப்பு, இரும்பு உருக்குகளை தயாரித்து வரு வதாக புகார் எழுந்துள்ளது. பொருட் களை எரிப்பதற்காக டயர், டியூப் போன்றவற்றை பயன்படுத்து வதால், அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுச் சூழல் கடுமையாக சீர்கெடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த புகையால் கடும் துர்நாற்றம் வீசு வதால், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

சமூக விரோதிகளின் இந்த செயல்பாட்டை தடுக்க தொல் லியல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது குறித்து போலீஸாரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE