அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகவில்லை: சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் விடுவிப்பு?

By செய்திப்பிரிவு

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்றபோது, சட்டசபை செயலராக செல்வராஜ் இருந்தார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு, இணை செயலராக இருந்த ஜமாலுதீனை செயலராக அரசு நியமித்தது. அவரது பதவிக்காலம் 2012-ம் ஆண்டு முடிந்தது. எனினும் அவருக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரங்களில் பல்வேறு சட்ட நுணுக்கங்களுடன் எதிர்க்கட்சி களுக்கு பதிலளிக்கும் வகையிலும் விவரங்களை அளித்துள்ளார். மேலும் சட்டசபையை நடத்து வதற்கு சபாநாயகருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதாக அவர் குறித்து தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தண்டனை பெற்றார். இதுதொடர்பாக சபாநாயகர் உத்தரவின் பேரில் கடந்த 8-ம் தேதி ஜமாலுதீன் அரசாணை வெளியிட்டார்.

அதில், எம்.எல்.ஏ., பதவியி லிருந்து ஜெயலலிதா தகுதியிழப்பு செய்யப்பட்டார் என்றும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் தகுதியிழந்தால், அவரது தண்டனைக் காலம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு கூடுதலாக தகுதியிழக்கிறார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த சூழலில்தான் ஜமாலுதீன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர் பாக அரசு வட்டாரத்தில் விசாரித்த போது ‘அவரை பதவியிலிருந்து விடுவித்ததற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் ஏதும் இல்லை’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE